×

கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

 

தேவதானப்பட்டி, மே 8: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த கடாமானை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் குடிநீரைத்தேடி விளைநிலங்களுக்குள் அவ்வப்போது புகுந்துவிடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சளாறு அணை வழுக்குபாறை அருகே தனியார் தென்னந்தோப்பில் உள்ள விவசாய கிணற்றில் அவ்வழியாக வந்த ஒரு வயது மதிக்கத்தக்க கடமான் தவறி விழுந்துள்ளது.

நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் சத்தம் கேட்பது தெரிந்து பார்த்துள்ளனர். அங்கு கடாமான் இருப்பது குறித்து பெரியகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 50 அடி கிணற்றில் இருந்த கடமானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Devadanapati ,Manjalur ,Manjalaru Dam ,Devdanapatti ,Kidman ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள்